இந்துக்கள் சொல்லும் மந்திரம் இயேசுவுக்கு பொருந்துமா⁉️🤔✅


Brihadaranyaka Upanishads (1.3.28)


asato mā sadgamaya
tamasomā jyotir gamaya
mrityormā amritam gamaya
Oṁ śhānti śhānti śhāntiḥ

பிருஹதாரண்யக உபநிஷத் (1.3.28)

அசதோ மா சத் கமய 
தமஸோ மா ஜ்யோதிர் கமய ம்ருத்யோர்மா அம்ருதம் கமய 
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!!!

மந்திர விளக்கம்

1.அசதோ மா சத் கமய
असतोमा सद्गमय ।
From ignorance, lead me to truth;

அறியாமையிலிருந்து, என்னை சத்தியத்திற்கு இட்டுச் செல்லுங்கள்;
👇👇👇

"இயேசுவை  சத்தியம் என்று பைபிள் சொல்கிறது"

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
(யோவான் 8:32 )

 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.(யோவான் 14:6)

2. தமஸோ மா ஜ்யோதிர் கமய
तमसोमा ज्योतिर् गमय ।
From darkness, lead me to light;

இருளிலிருந்து, என்னை வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லுங்கள்;
👇👇👇
"இயேசுவை  வெளிச்சம்(ஒளி) என்று  பைபிள் சொல்கிறது"

 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.(யோவான் 12:46)

 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.(யோவான் 9:5)

 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.(I யோவான் 1:5)

3. ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
मृत्योर्मामृतं गमय ॥
From death, lead me to immortality

மரணத்திலிருந்து, என்னை அழியாத நிலைக்கு இட்டுச் செல்லுங்கள்
👇👇👇

"இயேசுவால் அந்த அழியாத நித்திய ஜீவனை தரமுடியும் என்று  பைபிள் சொல்கிறது"

 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.(யோவான் 6:47)

 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.(யோவான் 17:3)

 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.(ரோமர் 6:23)

4. ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!!!
ॐ शान्ति शान्ति शान्तिः ।।
Om peace, peace, peace
👇👇👇

"இயேசுவினிடத்தில் அந்த சமாதானம் உண்டு என்று பைபிள் சொல்கிறது"

 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.(யோவான் 16:33)


மேலே சொல்லப்பட்ட மந்திரம் இயேசுவைத்தான் சொல்கிறது என்று நாம் சொல்ல வரவில்லை, ஆனால் அந்த மந்திரம் இயேசுவுக்கும் பொருந்துகிறது என்றே சொல்கிறோம். 

Post a Comment

0 Comments