இயேசு கடவுளா? மனிதனா? 👉 தோமா சொன்னது என்ன? ஆய்வு பகுதி -1

இயேசு வெறும் மனிதன்தான் என்றும் அவர் இறைவனின் தூதுவர் மட்டும்தான் அவர் கடவுள் இல்லை என்று சொல்வது சரியா என்று பரிசுத்த வேதாகம வசனங்கள் மூலம் ஆராய்வோம் .

இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான தோமா என்பவர் இயேசுவை 'தேவன்' (GOD) என்று அழைத்தார் . 

👉யோவான் 20:28

தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

👉John 20:28

And Thomas answered and said to him, “My Lord and my God”.

👉யோவான் 20:28 ( பொது மொழிப்பெயர்ப்பு )

தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார்.


இங்கு தோமா இயேசுவை கர்த்தர்(LORD) என்றும் கடவுள்(GOD) என்றும் சொல்கிறார். பொதுவாக மிகவும் மரியாதைக்குரியவர்களை  கூட LORD என்று அழைப்பார்கள், நம் நாட்டில் கூட நீதிபதியை LORD என்று அழைக்கும் வழக்கம் இன்றும் உண்டு, அதற்காக அவர் கடவுளாகிவிட முடியாது. ஆனால் தோமா LORD என்பதோடு நிறுத்திவிடவில்லை GOD (கடவுள்) என்றும் சொல்கிறார். 

இங்கே தேவன் (GOD-கடவுள்) என்பதற்கு மூலமொழியாகிய கிரேக்கத்தில் தியோஸ் (THEOS) என்றுள்ளது, அதுவே எபிரேயத்தில் ஏலோஹிம் (ELOHIM) என்று சொல்லப்படும் (ஆதியாகமம் 1:1) 

தோமா இயேசுதான் மேசியா( அபிஷேகம் பண்ணப்பட்டவர்) என்றும் தேவனின் வார்த்தையாக இருந்தார்(யோவான் 1:1-3) என்றும் அந்த வார்த்தை மனிதனின் சாயலாக நம்மோடு வாசம்பண்ணினார்(யோவான் 1:10) என்றும் அறிந்துகொண்டார். அதனால்தான் அவர் முழுமனதோடு இயேசுவை கடவுள் என்று அழைக்க முடிந்தது,இல்லையென்றால் பொதுவாக நியாப்பிரமானத்தை அறிந்த ஒரு யூதனான தோமா, மனிதராக இருக்கும் ஒருவரை  கடவுள் என்று அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது.

இங்கு நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் தோமா இயேசுவை கடவுள் என்று அழைத்தும் இயேசு அதற்கு எதிர்கருத்து தெரிவிக்கவில்லை. ஒருவேளை சிலர் சொல்வது போல் இயேசு கடவுளின் தூதுவராகவோ, தீர்க்கத்தரிசியாகவோ மட்டும் பூமிக்கு  வந்திருந்தால் அவரே நான் கடவுள் இல்லை என்று மறுத்திருக்க வேண்டும். ஆனால்  இயேசு அங்கே அவ்வாறு மறுக்கவில்லை ,அவரும் அதை அங்கீகரித்துள்ளார் என்று தெரிகிறது.

ஆகையால் இயேசுவின் சீடனாகிய தோமாவின் கூற்றுப்படி இயேசு கடவுள்தான் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு அறியத்தருகிறது.

'இந்த சீடன்தான் இந்தியாவிற்கு இயேசுவின் நற்செய்தியை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது '.


🙏










Post a Comment

0 Comments