இந்த கேள்விக்கு மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய 4 நற்செய்தி நூல்களில் பின்வரும் வசனங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
1️⃣ மத்தேயு 28:1 ( 2 பெண்: மகதலேனா, மற்ற மரியாள்)
2️⃣ மாற்கு 16:1 ( 3 பெண்: மகதலேனா மரியாள், யாக்கோபின் தாயாகிய மரியாள், சலோமே)
3️⃣ லூக்கா 24:1,10 (பல பெண்கள்)
4️⃣ யோவான் 20:1 (1 பெண்: மகதலேனா)
ஏன் இதில் இத்தனை முரண்பாடுகள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது முரண்பாடு அல்ல.
இந்த நான்கு சுவிஷேசங்களும் 4 வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அதாவது ஒரு சம்பவத்தை 4 ஆசிரியர்கள் வெவ்வேறு கண்ணோட்டத்தில் எழுதியுள்ளார்கள். லூக்கா சொல்கிறபடி அங்கு பல பெண்கள் சென்றார்கள். ஆனால் மத்தேயு எழுதும்போது அங்குச் சென்ற மொத்த பெண்களில் 2 பெண்களை மட்டும் மையப்படுத்தி எழுதுகிறார். மாற்கு எழுதும்போது கல்லறைக்குச் சென்ற மொத்த பெண்களில் 3 பெண்களை மட்டும் மையப்படுத்தி எழுதுகிறார். யோவான் எழுதும்போது கல்லறைக்குச் சென்ற மொத்த பெண்களில் 1 பெண்ணை மட்டும் மையப்படுத்தி எழுதுகிறார்.
எடுத்துக்காட்டிற்கு, பிரதமர் பாதுகாப்பு வாகனத்தில் வந்து இறங்கினார் என்று ஒரு செய்தித்தாள் சொல்கிறது. பாதுகாப்பு காவலர்கள் பிரதமரோடு வந்தார்கள் என்று இன்னொரு செய்தித்தாள் சொல்கிறது. இந்த டிரைவர் வாகனத்தில் வந்தார் என்று இன்னொரு செய்தித்தாள் சொல்கிறது. இந்த மூன்றில் எது உண்மை? ஒரு வாகனத்தில் பிரதமர் வருகிறார் என்றால் அதில் டிரைவர் இருப்பார், பாதுகாப்பு காவலர்களும் இருப்பார்கள். ஆனால் செய்தித்தாள் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் வெவ்வேறு நபர்களை மையப்படுத்தி பேசுகிறது. ஆனால் மூன்றும் உண்மைதானே!
அதுபோல்தான் இதுவும் ஒரே சம்பவத்தின் வெவ்வேறு கண்ணோட்டம். இயேசுவின் கல்லறைக்கு சென்றது லூக்கா சொல்வதுபோல் பல பெண்களாக இருந்தாலும் ஒவ்வொரு சுவிசேஷத்தின் ஆசிரியர்கள் ஒருசில குறிப்பிட்ட பெண்களை மையப்படுத்தி எழுதுவதால் அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதில் 4 சுவிசேஷ நூல்களில் சொல்லப்பட்ட தகவலும் உண்மைதான். இதில் எந்த முரண்பாடும் இல்லை.
0 Comments