பஞ்சம் 7 வருடமா அல்லது 3 வருடமா? 2 சாமுவேல் 24: 13 மற்றும் 1 நாளாகமம் 21:12 முரண்படுகிறதா?

பஞ்சம் 7 வருடமா அல்லது 3 வருடமா? 2 சாமுவேல் 24: 13 மற்றும் 1 நாளாகமம் 21:12 முரண்படுகிறதா?

பரிசுத்த வேதாகமத்தில் முரண்பாடு இருப்பதாக நிரூபிக்க விரும்புகிறவர்கள் வசனத்தை தவறாக மேற்கோள்காட்டி இரண்டையும் முரண்பாடு என்று சொல்வார்கள். இவ்வாறு முரண்பாடு மாதிரி தோன்றுகிற வசனங்களை நாம் இன்னும் ஆழமாக முன்புள்ள அதிகாரங்கள் என்ன சொல்கிறது என்பதையும் ஆராய்ந்துப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்.

2 சாமுவேல் 24:13 இல் "...உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ?..." என்று தாவீதை நோக்கி காத் என்னும் தீர்க்கதரிசி கேட்டதாக உள்ளது. ஆனால் 1 நாளாகமம் 21:12 இல் "மூன்று வருஷத்துப் பஞ்சமோ?..." என்று கேட்டதாக உள்ளது.

கேள்வி என்னவென்றால் பஞ்சம் 7 வருடமா அல்லது 3 வருடமா? 

இது இரண்டுமே உண்மைதான். 1 நாளாகமம் 21:12 சொல்லுகிறபடி இனிமேல் வரப்போகும் பஞ்சம் 3 வருடம் ஆனால் மொத்தமாக ஏற்கனவே வந்த பஞ்சம் சேர்த்து 7 வருடம்.

எப்படியென்றால் 2 சாமுவேல் 24: 12 இல் காத் இவ்வாறு சொல்லும் முன்னதாகவே ஏற்கனவே 3 வருடம் பஞ்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆதாரம் 2 சாமுவேல் 21: 1..."தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது..."

ஆகையால் ஏற்கனவே பஞ்சம் இருந்துவரும் 3 வருடம், காத் தீர்க்கதரிசனம் சொல்லும் அந்த வருடம் 4 வது வருடம், வரப்போகும் பஞ்சத்தின் வருடம் 3,  ஆக மொத்தம் 7 ஆண்டுகள் பஞ்சம் வரவேண்டுமோ என்று ஏற்கனவே பஞ்சம் உள்ள ஆண்டுகளையும் சேர்த்து காத் தாவீதினிடம் கேட்பதாக உள்ளது.

🎯 சாமுவேல் புத்தகம் பஞ்சத்தின் மொத்தமாக ஏற்படக்கூடிய கால அளவைக் பதிவு செய்கிறது; நாளாகமம் புத்தகம் கூடுதலாக வழங்கப்பட்ட பஞ்சத்தின் ஆண்டுகளை மட்டும் குறிப்பிடுகிறது. வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொள்ளும்போது, இரு பதிவுகளும் உண்மைதான். இது முரண்பாடு அல்ல; இரு புத்தகங்களும் ஒரே சம்பவத்தை இரண்டு விதமான அர்த்தத்தோடு குறிப்பிடுகிறது.

Post a Comment

0 Comments