இயேசு குற்றம் செய்யவில்லை என்பதற்கு மூன்றுபேரின் சாட்சி⏩💪

 இயேசு குற்றம் செய்தார் அதனால்தான் அவருக்கு சிலுவை தண்டனை கொடுத்தார்கள் என்று சொல்பவர்களுக்கு பரிசுத்த வேதாகமத்தில்(Bible) இருந்து பதில்......

1) இயேசுவுக்கு சிலுவை தண்டனை கொடுத்த பிலாத்துவின் சாட்சி

லூக்கா 23:4 👇
அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான். 



2) பிலாத்து மற்றும் ஏரோது ராஜாவின் சாட்சி

லூக்கா 23:14👇

14. அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. 

15 . உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை: மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.



⏩ 3) இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளியின் சாட்சி

லூக்கா 23:41,42 👇

41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும்  நடப்பிக்கவில்லையே ( has done nothing wrong) என்று அவனைக் கடிந்துகொண்டு, 

42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.


🤔சிந்தியுங்கள் நண்பர்களே!!!

இப்படி எந்த ராஜாவாவது குற்றவாளி என்று நிறுத்தப்பட்ட ஒருவரை அவன் குற்றவாளி இல்லை என்று சாதாரணமாக சொல்லிவிட முடியுமா?? மேலும் இயேசு தவறு செய்திருந்தால் எதற்காக தவறு செய்த ஒரு குற்றவாளி இயேசுவை நோக்கி இவர் குற்றம் செய்யவில்லை என்று சொல்லவேண்டும்?? 

பரிசுத்தமாக வாழ்ந்த ஒருவரால்தான் மற்றவரை பரிசுத்தமாக வாழவைக்க முடியும்....இயேசு பாவம் செய்யவில்லை அதனால் உங்கள் பாவத்தை போக்க, மன்னிக்க அவரால் முடியும்...🙏🏻✨













Post a Comment

1 Comments